Friday, May 30, 2014

DEVELOPMENT OF PARK - POOJA ON 02/06/2014

DEAR MEMBERS OF TNRWA,

   WE ARE VERY MUCH GLAD TO SHARE WITH YOU ALL THAT THE WORK FOR DEVELOPMENT OF PARK AT OUR NAGAR HAS BEEN SANCTIONED BY THE COMPETENT AUTHORITY AND THE WORK WILL BEGIN FROM MONDAY, THE 02nd JUNE 2014 (.)  IN THIS CONNECTION, A POOJA WILL BE PERFORMED BY THE CONTRACTOR AT OUR PARK PREMISES ON 02/06/2014 AT 0900 HRS. (.)  WE INVITE YOU ALL TO JOIN THE OCCASION AND MAKE THE EVENT A MEMORABLE ONE (.) 


AT (Y)OUR SERVICES,

K. SUNDARESWARN, PRESIDENT
V.L.GOPALAKRISHNAN, SECRETARY
T.SELVAM, PRESIDENT

VITAMIN

910111213

வயிற்றை ‘க்ளீன்’ பண்ணுவோம்

வயிற்றை ‘க்ளீன்’ பண்ணுவோம்           


’எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற முதுமொழி, உடல் அமைப்புக்கு மட்டுமல்ல, நம் உணவருந்தும் பழக்கத்துக்காகவும் கூட சொல்லப்பட்டதாக வைத்துக்கொள்ளலாம். வயிறு நிறைய, கிடைத்ததையெல்லாம் உண்டு வாழும் நமக்கு, ஏதாவது நோய் வந்து தொல்லை கொடுக்கும்போதுதான், உடல் நலத்தின் மீது கவனம் திரும்புகிறது. தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முழுவதுமாக செரிக்கப்படுவதும் இல்லை; செரித்த உணவு முழுமையாக உடலை விட்டு வெளியேறுவதும் இல்லை. சில சமயங்களில், இந்த கழிவுப் பொருட்கள் உடனடியாக வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிடும்.

இன்றைக்கு பலருக்கும் இதுதான் ஏகப்பட்ட உடல் உபாதைகளுக்கான அஸ்திவாரம். இப்படிச் சேர்ந்துவிடும் கழிவுகள் நச்சுக்களாக மாறி, பல நோய்களுக்குக் காரணமாகிவிடும். இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கு, செய்யவேண்டிய வழிமுறைகள்
”தேவை இல்லாத கழிவுகள் உடலில் சேரும்பட்சத்தில் அடிக்கடி நெஞ்செரிச்சல், ஏப்பத்தின்போது கெட்ட வாடை வீசுதல், மலம் கழித்தல் தொடர்பான பிரச்னைகள், உடல் எடை கூடுதல், வயிறு உப்புதல், சோர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் அடுக்கடுக்காய் தலைதூக்கும். இப்படிக் கழிவுகள் சேர்வதற்குக் காரணம், இன்றைய செரிக்க கடினமான உணவு முறைதான். தினமும் காலையில் சிறுநீர், மலம் எளிதாக வெளியேறினாலேயே, அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். 

கழிவுகளை வெளியேற்ற என்ன சாப்பிடலாம்?
  இரண்டு நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருந்தால், தேவையில்லாத காற்று வயிற்றை நிரப்பி தொப்பை வர வழிவகுக்கும். அதனால், தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடலிலுள்ள கழிவுகள் சுலபமாக வெளியேறும். மிதமான சூட்டில் டீ, காபி எடுத்துக்கொள்ளலாம்.
   எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், பச்சைப் பயறு, சோயாபீன்ஸ், பழச் சாறு, காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  மோர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்ந்த கரைசலைக் குடிக்கலாம்.
  சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வெந்நீர் அருந்த வேண்டும்.
  வாரம் ஒருமுறை வாழைத்தண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
  அசைவ உணவுகளை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.
  காலை வேளையில் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது.
  குழந்தைகளுக்கு வேகவைத்த காய்கறி நீர், முளைக்கட்டிய பயறு நீர் போன்றவற்றைக் கொடுப்பதால் சத்துக்கள் கிடைப்பதுடன், செரிக்காத உணவுகளை எளிதில் வெளியேற்றிவிடும்.
  சர்க்கரை நோயாளிகளைத் தவிர, மற்றவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாம்.
  சரியான வேளையில் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
என்னென்ன உணவுகள் சாப்பிடக் கூடாது?
   சுலபத்தில் செரிக்காத கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், கீரை உணவுகள், தேங்காய் சேர்த்த உணவுகள் போன்றவற்றை இரவில் உண்பதை அறவே தவிர்க்கவும்.
  எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்கள், காரம் அதிகமான பண்டங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
  தேங்காயில் செய்த பண்டங்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

Monday, May 26, 2014

EMPLOYMENT OPPORTUNITIES - SBI - CLERICAL CADRE

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5199 Assistant in ClericalCadre பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADVERTISEMENT NO. CRPD/CR/2014-15/02
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 5199
பணி: Assistants in Clerical Cadre
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 - 01.05.1994 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 7,200 . 19.300.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி.பிரிவினருக்கு ரூ. 450. SC, ST,PWD முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.06.2014.
ஆஃப் லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.06.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in அல்லது www.statebankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, May 17, 2014

CONGRATULATIONS MR. MODI

THIRUMALAIVASAN NAGAR RESIDENTIAL WELFARE ASSOCIATION EXTENDS ITS HEARTIEST CONGRATULATIONS TO SHRI NARENDRA MODI, THE PRIME MINISTER OF INDIA (DESIGNATE)





SHRI NARENDRA DAMODARDAS MODI
               
17-09-1950 BORN, 63 YRS. OLD
 











Monday, May 5, 2014



THIRUMALAIVASAN NAGAR

RESIDENTIAL WELFARE ASSOCIATION (TNRWA)

THIRUMULLAIVOYAL, CHENNAI – 600 062


                                                                                                            RESTRICTED

CIRCULAR / சுற்றரிக்கை

No.001/Awards                                                           Dated:        05/05/2014

Dear Parent,

          It gives us immense pleasure to inform you that, as done during the last year, students of Class X & XII (both CBSE and State) who secure the highest marks in the recent board examinations would be facilitated on behalf of TNRWA.   In this connection, we request you to kindly provide a photocopy of the mark statement of your ward, if he/she had appeared and successfully completes the board exams.   On receipt of the photocopy of the mark statement, a committee would pursue the documents and finalize the list of eligible candidates for getting the meritorious awards.  The meritorious awards (I, II & III) for this year will be distributed in the ensuing Independence Day celebrations (15th August 2014).  Please ensure submission of the mark statement by 07th July 2014.  It is also mentioned here that your ward’s mark statements would be sent to “Town News” for consideration against Town News “Mudalvar Virudu” awards.  Hope this initiative is in the right direction and, therefore, your kind co-operation is solicited.


அன்புடையீர்,

    10 மற்றும் 12ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவர்களை TNRWA சார்பாக கௌரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை கூறிக்கொள்வதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.  தங்களுடைய குழந்தை இந்த ஆண்டு 10 அல்லது 12ம் வகுப்பு தேர்வில் இடம்பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால்அதற்குரிய மதிப்பெண் சான்றிதழின் நகலை 07.07.2014 தேதிக்குள் எங்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  மாணவர்கள் பெற்ற சிறந்த மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் (1, 2, 3) வரும் 15.08.2014 அன்று நமது நகரில் நடக்கவிருக்கும்  சுதந்திர தின விழாவில் கௌரவிக்கப்படுவார்கள்.  மேலும், உங்கள் குழந்தையின் மதிப்பெண் சான்றிதழை டவுன் நியூஸ் பத்திரிக்கையின் முதல்வர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.


உங்களின் மேலான ஆதரவை நாடும்,



(K.SUNDARESWARAN)              (V.L. GOPALAKRISHNAN)           (T.SELVAM)
              PRESIDENT                                    SECRETARY                      TREASURER