Friday, April 26, 2013

ஏ.சி. மின் சிக்கனத்துக்கு புதிய கருவி அறிமுகம்

குளிர்சாதனப் பெட்டிக்கான (ஏ.சி.) மின் தேவையை வெகுவாகக் குறைக்கும் புதிய கருவியை ரெக்டஸ் மின்சக்தி தனியார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், இந் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராகுல் ஜெய்பால், வெங்கட் வெங்கட்ராமன் ஆகியோர் இந்தக் கருவியை அறிமுகம் செய்தனர்.
தமிழகத்தில் நிலவிவரும் கடும் மின் பற்றாக்குறை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வரும் மின் நுகர்வோருக்கு, இந்தக் கருவி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள்.
ஏ.சி.க்களில் இந்த கருவியைப் பொருத்தி, 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.
இதன் மூலம் நுகர்வோர் செலுத்தி வரும் மின் கட்டணமும் வெகுவாகக் குறையும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்தக் கருவிக்கான விலை ரூ. 9,800-லிருந்து ரூ. 18,000 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை இன்வெட்டர்களுடன் கூடிய ஏ.சி.க்களில் பயன்படுத்த முடியாது

No comments:

Post a Comment